×

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் ஜனாதிபதிக்கு பைபாஸ் சர்ஜரி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறவுள்ளதாக ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லேசான இதய பிரச்னைகள் காரணமாக, டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதியை நேரில் சென்று நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனாதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜனாதிபதி ராமாத் கோவிந்த் இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு பைபாஸ் சர்ஜரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான பைபாஸ் சர்ஜரியானது மார்ச் 30 செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது….

The post எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் ஜனாதிபதிக்கு பைபாஸ் சர்ஜரி appeared first on Dinakaran.

Tags : AIIMS Hospital ,New Delhi ,Rashtrapati Bhavan ,President ,Ram Nath Kovind ,Ramnath Kovind ,AIIMS Hospital for Bypass Surgery for ,Dinakaran ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை